குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 51 ஜெலிக்னைட் மருந்து பொருட்களை வைத்திருந்த இருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(16) உத்தரவிட்டார்.
ஜாயா நகர்,குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 40 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் வீட்டு வளவினுள் 51 ஜெலிக்னைட் குச்சிகள்,மூன்று திரி,ஒரு கைவாள் போன்ற பொருட்களை புதைத்து வைத்திருந்த நிலையில் குச்சவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகள் மூலம் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் மீன் பிடிப்பதற்காக இவ் சட்டவிரோத பொருட்களை வைத்திருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment