சவளக்கடை 6ஆம் கொளனி றோயல் விளையாட்டுக் கழகத்தின் புதிய அங்கி அறிமுக சினேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடாக்கோ நிறுவனத்தின் அனுசரணையில் 6ஆம் கொளனி அல்-தாஜூன் பாடசாலை மைதானத்தில் இன்று இடம்பெற்றது.
20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 11பேர் கொண்ட கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி றோயல் விளையாட்டுக் கழகத்திற்கும், வீரத்திடல் விளையாட்டுக் கழகத்திற்குமிடையிலான சினேகபூர்வ அங்கி அறிமுக கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் றோயல் விளையாட்டுக் கழகம் 37 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
நாணையச் சுழச்சியில் வெற்றிபெற்ற றோயல் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்படுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வீரத்திடல் விளையாட்டுக் கழகம் 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 144 ஒட்டங்களை பெற்று தோல்வியைத் தழுவிக்கொண்டது. போட்டியின் ஆட்டநாயகன் விருதை றோயல் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர் ஏ.எம்.சனீர் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வு றோயல் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், கடாக்கோ வெல்டிங் சொப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஏ.எம்.வசீர்;; தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் குளோபல் இம்போர்ட், எக்ஸ்போட் டிரேடிங் கம்பனி உரிமையாளர் ஏ.எம்.ஜனீஸ், தொழில்லதிபர் ஜெ.எம்.பாஹிம், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.பைசாத், றோயல் விளையாட்;டுக் கழகத்தின் முன்னாள் உதைப்பந்தாட்ட தலைவர் எம்.ஐ.யுனைதீன், மைட்டி வோரியஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எச்.எம்.கபீர், தொழில்லதிபர் எம்.மஜீட் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எம்.அஸ்வர், எம்.எச்.எம்.மபாஸ், சாளம்பைக்கேணி-02, கிராமிய அபிவிருத்தி சங்க தலைவர் யூ.எல்.தௌபீக், உள்ளிட்ட முக்கிஸ்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது விளையாட்டுத் துறை மற்றும் சமூக சேவைக்கு பங்களிப்பு செய்தவர்களும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பித்தக்கது.
0 comments :
Post a Comment