முஸ்லிம் விடுத‌லை முன்ன‌ணி- அகில‌ இல‌ங்கை முஸ்லிம் க‌ட்சியாக பெயர் மாற்றம்.


நூருல் ஹுதா உமர்-

முஸ்லிம் விடுத‌லை முன்ன‌ணி என்ற‌ பெய‌ரில் செய‌ல்ப‌ட்டு வ‌ந்த‌ நாம் எம‌து க‌ட்சியின் பெய‌ரை அகில‌ இல‌ங்கை முஸ்லிம் க‌ட்சி என‌ க‌ட‌ந்த‌ உய‌ர் ச‌பை கூட்ட‌த்தில் முடிவு செய்தோம். அத‌னால் இப்பெய‌ரில் தொட‌ர்ந்து இய‌ங்குவோம் என அகில‌ இல‌ங்கை முஸ்லிம் க‌ட்சியின் வ‌ருடாந்த‌ கூட்ட‌ம் க‌ட்சியின் கல்முனை காரியால‌ய‌த்தில் நேற்று மாலை க‌ட்சியின் த‌லைவ‌ர் இர்பான் தலைமையில் நடைபெற்ற போது அங்கு பேசிய க‌ட்சியின் தலைவர் முஹ‌ம்ம‌து இர்பான் அக்கூட்டத்தில்‌ தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து உரையாற்றிய‌ செய‌லாள‌ர் நாயகம் முர்ஷித் முபாரக் எம‌து க‌ட்சியின் முன்னைய‌ பெய‌ரில் நாம் க‌ட்சியை ப‌திவ‌த‌ற்காக‌ 2017ம் ஆண்டு தேர்த‌ல் ஆணைக்குழுவிட‌ம் ஒப்ப‌டைத்தோம். சில‌ கார‌ண‌ங்க‌ளால் ப‌திவு செய்யும் வாய்ப்பு தவறி அந்த காலத்தில் நமது விண்ணப்பம் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌து. எதிர்கால‌த்தில் அக்குறைபாடுக‌ளை நிவ‌ர்த்தி செய்து எமது அகில‌ இல‌ங்கை முஸ்லிம் க‌ட்சியை ப‌திவ‌த‌ற்கான‌ முய‌ற்சியை மேற்கொள்வோம் என‌ தெரிவித்தார்.

அத‌ன்பின் அக்க‌ட்சியின் புதிய‌ நிர்வாகிக‌ள் பின்வ‌ருமாறு தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

த‌லைவ‌ராக முஹ‌ம்ம‌து இர்பானும் ,பொதுச்செய‌லாள‌ராக எம்.முர்ஷித்,பொருளாள‌ராக முஹ‌ம்ம‌த் முஜாஹித்
த‌விசாள‌ர் ருஷ்தி நாச‌ர், உப‌ செய‌லாள‌ராக காமில் மௌல‌னா, உப‌ த‌லைவ‌ர்க‌ளாக மௌல‌வி ஹாரூன், அட்ட‌ளைச்சேனையை சேர்ந்த ப‌வ்சுல் ர‌ஹ்மான், சாஹிபு லெப்பை முஹ‌ம்ம‌த் சாஜித், அக்கறைப்பற்றை சேர்ந்த அஹ‌ம‌ட் ர‌ஷாத் அப்துல் ர‌ஹீம் ஆகியோரும் இணைத்தேசிய அமைப்பாளர்களாக மிஸ்பான் மற்றும் முஹ‌ம்ம‌த் பைசல் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதுடன் ம‌க‌ளிர் விவ‌கார‌ ஆலோச‌க‌ராக எம். ரீஹாவும் இளைஞ‌ர் விவ‌கார‌ பொறுப்பாளராக அல்- மீஸான் பௌண்டஷன் கல்முனை இணைப்பாளர் ஜ‌வ்ஸான் அப்துல் ர‌ஹீமும் நியமிக்கப்பட்டார்.

அத்துட‌ன் 10 பேர் கொண்ட‌ மேல‌திக‌ உய‌ர்ச‌பை உறுப்பின‌ர்க‌ளும் அக்கூட்டத்தில் தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :