கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்றிரவுடன் நிறைவடையவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
மாணவர்கள்இ புத்தகம் வாசிப்பவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இலங்கையில் 22வது தடவையாக இந்த கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்கள்இ புத்தகம் வாசிப்பவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இலங்கையில் 22வது தடவையாக இந்த கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கண்காட்சியில் சகல புத்த வெளியீட்டாளர்கள்இ புத்தக எழுதுனர்கள்இ வாசிப்பாளர்களை ஒன்றினைத்து இதனை ஏற்பாடு செய்துள்ளதாகவும் கடந்த 18ஆம் திகதி கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமான இக்கண்காட்சி இன்று 27ஆம் திகதி நிறைவடைகின்றது.
சுமார் ஒரு மில்லியன் மக்கள் இந்த புத்தகக் கண்காட்சிக்கு வந்ததாகவும் பல பெறுமதியான புத்தகங்கள்இ சஞ்சிகைகள்இ மாணவர்களுக்கான பாட நூல்கள் மற்றும் கல்வியோடு தொடர்புடைய பல பொருட்கள் காட்சிக்காகவும்இ மலிவு விலையில் விற்பதற்காகவும் வைக்கப்பட்டிருந்தாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இக்கண்காட்சி தாம் எதிர்பார்த்ததைவிட வெற்றியாக அமைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment