அண்மையில் மறைந்த நாடறிந்த எழுத்தாளர் 'முகில்வண்ணன்" என இலக்கியப்பெயரால் அழைக்கப்பட்ட பாண்டிருப்பைச்சேர்ந்த வே.சண்முகநாதனின் நினைவேந்தல் நிகழ்வை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
கல்முனைநெற் இணையக்குழுமத்தின் ஸ்தாபகரான மறைந்த எழுத்தாளர் முகில்வண்ணனுக்கு அக்குழுமத்தினர் நினைவுமலரை வெளியிட்டும் நினைவேந்தலை நடாத்தவும் திட்டமிட்டுள்ளது.
அது தொடர்பான ஆரம்பக்கூட்டம் பாண்டிருப்பு மறுமலர்ச்சி வாசிகசாலை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
முதலில் காலஞ்சென்ற முகில்வண்ணனுக்கு 2நிமிடநேர மௌனஅஞ்சலி இடம்பெற்றது
குழுமத்தின் பணிப்பாளர் பு.கேதீஸ் தலைமையில் செயலாளர் கே.சந்திரலிங்கத்தின் (ஓய்வுநிலைஅதிபர்)வழிநடத்தலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குழும உறுப்பினர்கள் தமது கருத்துக்களைப்பரிமாறினர்.
இறுதியாக அவரது 31 வது நினைவுதினத்தில் நூலைவெளியிட்டு இந்நிகழ்வை நடாத்தி அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அதற்காகன குழுக்களும் நியமிக்கப்பட்டன. அத்துடன் மேலும் சில எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
நாடறிந்த எழுத்தாளர் 'முகில்வண்ணன்' என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை சண்முகநாதன் தனது 78ஆவது வயதில் கடந்த(17)வியாழக்கிழமை காலமானார்.
;.கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த முகில்வண்ணன் சிறுகதை கவிதை நவீனம் கட்டுரை நாவல் என இலக்கியப்பரப்பில் 30நூல்களை எழுதி வெளியிட்டவராவார். எழுத்துலகில் 50ஆண்டுகள் எழுதி பொன்விழாக்கண்ட எழுத்தாளன் எனப்பெயரெடுத்தவர்.
'ஆனந்தக்கண்ணீh'; 'அவள் ஒருதமிழ்ப்பெண்' 'இனியும் நான் இராமன்தான்' 'செல்லக்கிளி' 'முருகனருள'; 'பாண்டிருப்புஸ்ரீ திரௌபதை அம்மனாலயம் ' 'பாவைநோன்பு' 'பளிங்குமாளிகை' 'பொங்கல்கவிதைகள்' 'சிங்கராஜா' 'ஒரு தேடல்' 'கட்டுரைக்களஞ்சியம'; 'நீறுபூத்தநெருப்பு' 'எழுத்துலகில் 50ஆண்டுகள் 'போன்ற காலத்தைவென்ற பல இலக்கியப்படைப்புகளை வெளியிட்டவராவார்.
அன்று இப்பிரதேசத்தில் கல்முனை எலக்ரோன் என பிரபலமான பெயரோடு இருந்தவர் தொழிலில் பொறியியலாளாராவார். பஞ்சாயக்குழு உபதலைவராகவிருந்தவர்.1966களிலிருந்து எழுதத்தொடங்கியர். அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தனாதிகாரியாகவிருந்தவர்.
இலக்கியப்பரப்பில் கலாபூசணம் வித்தகர் எனப்பலவிருதுகளுக்கு சொந்தக்காரன்.பாண்டிருப்பு துரௌபதைஅம்மனாலய தலைவராக சிலகாலம் இறைபணியாற்றியவர். இலங்கை பிரம்மகுமாரிகள் அமைப்பின் முக்கிய பிரமுகராகஇருந்த ஓர் ஆன்மீகவாதி.திருவாசகம் கந்தசஷ்டி போன்ற தமிழ்நூல்களை மொழிபெயர்த்து சிங்களத்தில் எழுதியுள்ளார். இதற்கு இந்துகலாசாரதிணைக்களம் யாழ்ப்பாணத்தில் 2016இல் நடாத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாட்டில்வைத்து பாராட்டிக்கௌரவிக்கப்பட்டவராவார்.
0 comments :
Post a Comment