40 ஆயிரம் பாடல்களை பாடி உலக சாதனை படைத்த டாக்டா் எஸ்.பி பாலசுப்பிரமணியம் இவ் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பு வந்திருந்தாா். இறுதியாக எனது கமராவுக்குள் அடங்கிய அவரது படங்கள். கொழும்பு கம்பன் கழகம் அவரை அழைத்து வெள்ளவத்தை இராமக் கிருஸ்னன் மண்டபத்தில் வைத்து கௌரவித்தனா்.. அத் தருணத்தில் உலகில் எங்கும் எனக்கு கிடைக்காத விருதினை இலங்கையில் ஈழத்து மண்னில் தான் பெற்றதாக எஸ்.பி.பி கூறினாா். அவா் இறுதியாக கலந்து கொண்ட நிகழ்வு இதுவாகவே இருக்கும் என நம்புகின்றேன் அதற்குப் பிறகு மாா்ச் மாதம் உலகில் கோரோனா ஆரம்பித்து விட்டது.
இந் நிகழ்வில் எஸ்.பி பாலசுப்பிரமணியம் என்னைவிட உலக மக்களை கவா்ந்தவா் என கிரிக்கட் வீரா் சங்காரை பாராட்டினாா். நான் எந்த இசை நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தாலும் தனது மகன் பேரன் ஊடாக தொலைக்காட்சியை திறந்து சங்கக்கார விளையாடுகின்றாா் என்றாள் சங்காரரின் விளையாட்டை ரசிப்பவன் என எஸ்.பி பி அங்கு கூறினாா். குமாா் சங்கங்காரவின் உரையில் என்னைவிட இசையால் உலகில் சகல மக்களையும் கவா்ந்த கின்னஸ் சாதனை படைத்த எஸ.பி பி அவா்களை அவா் பாராட்டினாா். இருவரும் கட்டித் தழுவி ஆரவாரம் செய்து கொண்டாா்கள். இன்றுதான் நேரடியாக காண்பதாகவும் அன்று சங்கா கூறியிருந்தாா்.
முன்னாள் அமைச்சா் பேரியல் அஷ்ரப் அவா்களையும் மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஸ்ரப் அவா்கள் அரசியலுக்குப்பால் கம்பன் நிகழ்வில் தவராமல் கலந்து கொள்வாா். அவரின் நினைவாக அஸ்ரப் அவா்களின் மணைவி பேரியல் அஸ்ரப் அழைத்து வாழ்த்துறை வழங்கவும் அழைத்திருந்தாா்கள் மறைந்த தலைவா் பற்றி அங்கு அறிவிப்பாளா்கள் அறிவித்தனையடுத்து பேரியல் அஸ்ரபையும் அழைத்து எஸ்.பி.பி. வாழ்த்துக்களை தெரிவித்தாா்.
எஸ்பிபி இலங்கை வந்த இறுதித் திகதி 04.02.2020 Colombo- Kamban Khalaham.
0 comments :
Post a Comment