வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளை பின்னால் சென்று மோதிய டிப்பர் -.இருவர் படுகாயம்



பாறுக் ஷிஹான்-
வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச்சென்று பின்னால் டிப்பர் வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவு எல்லைக்குட்பட்ட கம்பிக்காலை பகுதியில் இன்று(22) முற்பகல் இவ்விபத்து இடம்பெற்றது.

இதன் போது இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மத்தியமுகாம் 6 ஆம் பிரிவினை சேரந்த 52 வயதுடைய பிள்ளையான்தம்பி அரசரட்ணம் வலது கால் உடைந்த நிலையிலும் மற்றுமொருவரான அன்னமலை 3 ஆம் பிரிவினை சேர்ந்த 32 வயதுடைய கோபாலப்பிள்ளை குகதாஸ் வலது கை உடைந்த நிலையிலும் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.

குறித்த விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் வாகனச்சாரதி சவளக்கடை போக்குவரத்து பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் விபத்தில் காயமடைந்தவர்களை அழைத்துச்செல்வதற்காக பொதுமக்களினால் அவசர நோய் காவு வண்டிகளுக்கு அழைத்த போதிலும் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என குற்றஞ்சாட்டினர்.

மேலும் இவ்விபத்து தொடர்ச்சியாக இடம்பெறாது இருப்பதற்கு டிப்பர் வாகனத்தின் போக்குவரத்தினை பிரதான வீதிகளில் மட்டுப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :