சமுர்த்தி சௌபாக்கியா வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வறிய நிலை மக்களுக்கு வீடு

ஏறாவூர் எம்ஜிஏ நாஸர்-

முர்த்தி சௌபாக்கியா வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் ஏறாவூர் நகர் பிரதேசத்தில் வறிய நிலையிலுள்ள ஏழு குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜுத் இவ்வீடுகளுக்கான ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இத்திட்டத்தின்கீழ் முதலாவது வீட்டினை ஏறாவூர் 6 ஆம் வட்டாரத்தில் நிருமாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் இன்று நடப்பட்டது.
பிரதேச திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் எம்ஏஎப். சிஹானா, சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்எம். பசீர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படுகின்ற ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு இலட்சம் ரூபா நிதி அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது.
மேலும் தேவையான நிதியை பயனாளிகளின் பங்களிப்பாகவும் நன்கொடையாளர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ளவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீடு இல்லாதவர்கள், வாழ்வாதாரம் குறைந்தவர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் பட்டியலிலருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு இவ்வீடமைப்பு மானியம் வழங்கப்படுவதாக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யுஎல்எம். அஸீஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :