ஸ்ரீ வீரபத்திரசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்...

காரைதீவு சகா-

காரைதீவு ஸ்ரீ வீரபத்திரசுவாமி ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று(22) ஆரம்பமாகியது.

இவ் உற்சவமானது தொடர்ச்சியாக 9தினங்கள் திருவிழாக்களுடன் இடம்பெற்று அக்டோபர் 01ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் பிரசன்னத்துடன் திருவிழாக்கள் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

29ஆம் திகதி சப்பறத்திருவிழா ஊர்வலமானது நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அக்காலசூழ்நிலைகருதியே இது நடைபெறுமென தெரியவருகிறது.

நாட்டின் கொரோனா நடைமுறைகளுக்கமைவாக நேர்கடன்செலுத்துதல் உள்ளிட்ட சில ஏற்பாடுகளுக்கு தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளன.
சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென காரைதீவு பிரதேசசெயலக மேலதிக மாவட்டப்பதிவாளர் எஸ்.பார்த்தீபன் ஆலயநிருவாகத்திற்கு அறிவித்துள்ளார்.

தீர்மானங்களை மீறி பொதுமக்கள் கூடுதலாகஒன்றுகூடும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதற்கு ஆலயநிருவாகமே பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :