அஷ்ரப் ஏ சமத்-
வெள்ளவத்தை சைவமங்கையா் மகளிா் கல்லுாாியின் மாணவத் தலைவிகள் 45 பேர் அடங்கிய குழு 13.10.2020 வெள்ளவத்தை புகையிரத நிலையத்தினை அன்டிய பிரதேசத்தில் உள்ள கடற்கரையை சுத்தப்படுத்தி சிரமதாணப் பணிகளில் ஈடுபட்டனா். இந் நிகழ்வினை ரொட்டரிக் கழக, பேல் ஜலன்ட் அனுசரனை வழங்கியது. இத் திட்டதிற்காக வெள்ளவத்தை பொலிஸ் அதிகாரிகள், கொழும்பு மாநகர சபை பெற்றோா்களும் அதிபா் ஆசிரியா்களும் கலந்து கொண்டு உதவிகளை வழங்கியிருந்தனா்.
இந் நிகழ்வு கல்லுாாி அதிபா் அருந்ததி ராஜவிஜயன், வெள்ளவத்தை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கபில விஜயமான , கொழும்பு மாநகர சபை உறுப்பிணா் பாஸ்கரா , கல்லுாாியின் மாணவிகளின் வழிகாட்டுணா் ஆசிரியை சிவகுரு ஜெயருபனும் கலந்து சிறப்பித்தாா்கள். இத் திட்டத்தினால் கல்வியை மட்டுமல்லாது மாணவிகளது சமுக சேவையில் முற்றாக தம்மை அர்ப்பணிக்கும் பணிக்கும் மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டாா்கள். தமது சுற்றாடல், வீடு, பாடசாலை சமுகங்களை சுற்றாடல் துறை சுத்தமாக வைத்தல் பணியில் பாரியதொரு பயிற்சியை அனுபவத்தினையும் பெற்றதாக கல்லுாாியின் மாணவத் தலைவி காவித்திரி தெரிவிததாா்.
0 comments :
Post a Comment