அரசின் 'செழிப்பின் பார்வை' காணி உரித்து செயற்றிட்டத்தை பூரணமாக செயற்படுத்த காதர் மஸ்தான் நடவடிக்கை.

ஊடகப்பிரிவு-
வணங்கள் எதுவுமின்றி அரச காணிகளில் குடியிருப்பவர்களுக்கு அல்லது அவற்றில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அக்காணிகளின் உரித்தாவணங்களை வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் வன்னி மாவட்டத்தில் அத்திட்டத்தை பூரணமாக நடைமுறைப்படுத்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பில் மன்னார் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதுடன் பிரதேச செயலாளர்கள் கிராம அதிகாரிகள் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் மூலம் வன்னி மாவட்டத்தின் அனைத்து பொது மக்களுக்கும் இதனை அறிவுறுத்தி விழிப்புணர்வூட்டுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்காக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் மாவட்ட அலுவலகங்களில் அல்லது அவரது இணைப்பாளர்கள் மற்றும் அந்தந்த பகுதி கிராம அதிகாரிகளிடம் பெற்று இம்மாதம் 30 ம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அரச காணிகளில் குடியிருப்பவர்கள்,விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததுடன் இந்த சந்தர்ப்பத்தை வன்னி மாவட்ட மக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :