டிக்டாக் உட்பட பல செயலிகளை இலங்கையிலும் தடைசெய்ய கோரிக்கை



M.I.இர்ஷாத்-
லங்கையிலும் தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பு அல்லது சவால் ஏற்படும் பல செயலிகள் இருப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்பசங்கம் அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இந்திய அரசாங்கம் சுமார் 244 செயலிகளை தேசிய பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு தடை செய்தது.

அமெரிக்க அரசாங்கமும் பல செயலிகளை தடை செய்திருக்கிறது.

அந்த வகையில் இலங்கையிலும் பாவனையிலுள்ள ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் தேசிய பாதுகாப்பிற்கு சவால் ஏற்படுகின்ற செயலிகள் இருப்பதாக அந்த சங்கம் அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆகவே விரைவில் இதுபற்றி கவனம் செலுத்தி தடைசெய்ய வேண்டிய செயலிகளை உடனடியாக தடை செய்யும்படியும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :