ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் என்பது அரசாங்கத்தில் இருக்கும் போது அனைத்து சட்டங்களையும் ஆதரித்து கை உயர்த்துவதும் எதிர்க்கட்சியில் இருக்கும் போது தெரியாத்தனமாக கை உயர்த்திவிட்டோம், மடத்தனம் பண்ணி விட்டோம் எனவும் அறிக்கை விடுவது அக்கட்சியினரின் வழமையான அரசியலாகும்.
இதனால் அக்கட்சியினர் பெறுவதை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் முஸ்லிம் சமூகம்தான் அவமானப்படுகிறது.
கடந்த 18வது திருத்தம், திவிநெகும திருத்தங்களின் போதும் இப்படித்தான் முஸ்லிம் காங்கிரஸ் வீறாப்பு பேசி எதிர்த்தது. பின்னர் பெட்டிகளும் பதவிகளும் கிடைத்த போது சரணடைந்து அச்சட்டங்களுக்கு ஆதரித்ததை கண்டோம்.
இப்போது 20வது திருத்த சட்டத்துக்கெதிராக நீதி மன்றம் போவோம் என அக்கட்சி சொல்வது முஸ்லிம்கள் மீதும் நாட்டின் மீதும் கொண்ட அக்கறையினால் அல்ல. இப்படியொரு பயமுறுத்தலை செய்து அரசிடமிருந்து ஏதும் கிடைக்காதா என்ற கேவலமா அரசியல் லாபத்துக்காகவே இவ்வாறு செய்கின்றனர்.
20வது திருத்தச்சட்டம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதிக்குமா இல்லையா என்பதை இந்த நாட்டில் வாழும் ஒரு கோடிக்கு மேலான சிங்கள மக்களின் அரசியல் கட்சிகள் பார்த்துக்கொள்வார்கள். அச்சட்டத்தால் நாட்டுக்கு தீமை என்றால் முதலில் பாதிக்கப்பட போவது அந்த மக்கள்தான். அதனால் அவர்களை தீர்மானிக்க விட்டு விட்டு முஸ்லிம் கட்சிகள் மவுனமாக இருப்பதே சமூகத்துக்கு செய்யும் பேருதவியாகும்.
ஆகவே 20வது திருத்த சட்டத்துக்கெதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதி மன்றத்துக்கு போவது இலங்கை முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கும் மற்றொரு சமூகத்துரோகமாகும்.
0 comments :
Post a Comment