நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி...

க.கிஷாந்தன்-


நுவரெலியா – தலவாக்கலை வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இன்று (15) மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

நோர்வூட் கீழ்பிரிவைச் சேர்ந்த செல்வராஜா பிரேம்சதீஸ் (வயது -24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்களும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

முன்னேசென்ற வாகனமொன்றை முந்திக்கொண்டு செல்வதற்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் முற்பட்டவேளையிலேயே எதிர்திசையில் வந்த பேருந்துடன் மோதி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :