மன்னார் விடத்தல்தீவு நாயற்றுவெளியில் நீர் வாழ் இனங்களை உற்பத்தி செய்யும் நீர்யியல் பூங்கா ஒன்றை நிர்மாணிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டதைத் தொடர்ந்து கள நிலவரங்களை ஆராய்வதற்காக மீன்பிடி நீரியல் இராஜாங்க அமைச்சர்
காஞ்சன விஜயசேகர மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான
காதர் மஸ்தான் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் கடல் மற்றும் தரை வழிகளினூடாக பயணித்து குறித்த இடத்தை பார்வையிட்டனர்.
அப்பகுதியில் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவதோடு தொழில் வாய்ப்பினை ஊக்குவிக்கும் நோக்கையும் அடிப்படையாக கொண்டே மேற்படி செயற்த்திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் R.
மோகனராஸ்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் S.
கேதீஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்கள், அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment