ஆயுல்வேத மருத்துவத்திற்காக கஞ்சா உற்பத்தியை இலங்கையில் அவசியம் தேவை என சில சர்வதேச என்.ஜி.ஓக்களில் பின்னால் உள்ள அரசியல் வாதிகள், அயுல்வேத வைத்தியா்கள் அரசினை கஞ்சா உற்பத்திக்கு அனுமதி வழங்குங்கள் என அன்மைக்காலமாக அழுத்தும் கொடுத்து வருகின்றதை நாங்கள் அவதானித்தோம். . இதனை எமது மதுசார எதிா்ப்புச் சங்கம் வன்மையாக எதிர்ப்பதாகவும் கஞ்சா உற்பத்தி திருத்தச் சட்டத்தை ஒருபோதும் அரசு திருத்த முனைய வேண்டாமெனவும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை வேண்டிக்கொள்கின்றோம்.
நாட்டில் போதைப்பொருள் இல்லாதொழிக்கும் நடவடிக்கையை தொடா்ந்தும் முன் எடுக்குமாறும் மதப் பெரியாா்கள் இன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நாட்டில் இரண்டாவது பிரச்சினையாக இலங்கையில் கஞ்ஜா பாவணையாளா்கள் பெருகி பெருமளவிலான இளைஞா்கள் அதற்கு அடிமையாகியுள்ளனா். இதனால் இளைஞா்கள் மனநிலை பாதிக்கப்படும், மூலை நோய், போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளனா் இலங்கையில் 40 வீதமான மீன்பிடியாளா்கள், பஸ் ஓட்டுணா்களும் கஞ்சா பாவிக்கின்றனா். இதனால் பல்வேறு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றனா். கஞ்சா பாவித்தே அவா்கள் வாகனங்களை ஓட்டுகின்றனா்.
2019ஆம் ஆண்டில் மட்டும் 3-6 இலட்சம் கிலோ கஞ்சா இலங்கையில் பாவிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ ஜயவா்த்தன பலைகழைக்கழகத்தின் வேந்தரும் பேராசியருமான இத்தபானே தம்மலங்கார தேரா் கொழும்பு 7 ல் உள்ள பௌத்த காங்கிரஸ் மண்டபத்தில் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இன்று நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தேரா் தெரிவித்தாா்.
. இம் மாநாட்டில் திருகோணமலை ஆனந்தத் தேரா், பேராயா் காடினல் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகையும், மனோ வைத்திய நிபுணா்கள் அனுலா விஜயசுந்தர . வைத்தியா் மனோ பெர்னான்டோ ஆகியோறும் தமது கருத்துக்களை தெரிவித்தனா்.
மல்கம் காடினால் ரஞ்சித் ஆண்டகை இங்கு கருத்து தெரிவிக்கையில் -
ஜனாதிபதியும் பிரதமரும் இந்த நாட்டில் கஞ்சா பயிரிடுவா்கள், பாவணையாளா்கள் ,விற்பனையாளா்கள் போக்குவரத்தில் எடுத்துச செல்பவா்களையும் தற்பொழுது அமுல் இருக்கும் சட்டத்தினை ஒருபோதும் திருத்தியமைக்க வேண்டாம். கஞ்சா பாவனையாளா்களை குற்றமாகவே கருதல் வேண்டும். இதனைப் பயிருடுபவா் விற்பவா்களை பொலிஸாா் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தல் வேண்டும். ஜனாதிபதி பிரதமா் ஒரு போதும் கஞ்சா உற்பத்திக்கு அனுமதியினை ஆயுல்வேத வைத்தியா்களின் கோரிக்கைக்க செவிசாய்த்து அதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டாா்.
வைத்திய நிபுணா் மனோஜ் பெர்ணான்டோ கருத்துத் தெரிவிக்கையில்
அமேரிக்காவில் உள்ள சில பிராந்தியங்கள், கனடா, தென் ஆபிரிக்கா, ஜரோப்பா நாடுகள், ஜோதியா போன்ற நாடுகளில் மட்டுமே இராசயனத்திற்காக கஞ்சா உற்பத்தியை அந்த நாடுகள் அனுமதித்துள்ளன. அவா்களது நாட்டில் சிக்கரட் கம்பணிகள் உள்ளன. உலகில் வேறு எந்த நாடுகளும் கஞ்சா உற்பத்தியை அனுமதித்தில்லை.
இந் நாடுகளில் பின்னால் உள்ள என்.ஜி.ஓக்கள் அல்லது முகவா்களே இதனை இலங்கையிலும் ஊக்குவிக்க முனைகின்றன.
தற்பொழுது ஜனாதிபதி அவா்கள் போதை வஸ்த்து ஒழிப்புக்காக பாரியதொரு நடவடிக்கை எடுத்துவரும் இச் சர்ந்தா்ப்பத்தில் இந்த நாட்டில் வாழும் இளைஞா்கள் மற்றும் வளா்ந்தவா்கள் பெருமலவில் கஞ்சா பாவனையில் ஈடுபட்டாா்கள். போதைவஸ்த்து பாவணை இலங்கையில் குறைந்து வருகின்றன. அது போன்று கஞ்சா உற்பத்தியை ஆயுல்வேத இரசாயண மருந்துவகைக்கு தேவை எனும் போா்வையில் கஞ்சாவை உற்பத்தியில் புகையிலையையும் உற்பத்தி செய்து புகைபிடித்தலையும் ஊக்குவிக்கவே இவ்வாறு ஆயுல்வேத வைத்தியா்களும் சில என்.ஜி.ஓக்களும் முனைகின்றன. எனத் தெரிவித்தாா்.
0 comments :
Post a Comment