நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் எலபட கீழ்ப்பிரிவு தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரின் விடுதிக்கு அருகாமையில் மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கிளை ஆறு ஒன்றிலும் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த எட்டு பேர் ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர்,
இன்று (08/09) செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது,
குறித்த பகுதியில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த இந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு தொடர்பில் ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விதித்த அல்விஸின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றதோடு சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்களும் பலாங்கொட பொகவந்தலாவ நோர்வூட் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களென ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது,
இதேவேளை, மாணிக்கக்கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட கால்வாயில் இருந்து தோட்ட வெளிகள உத்தியோகத்தரின் வீடுதிக்குள் பாரிய சுரங்க குழிகளை ஏற்படுத்தியிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த வீடுதிக்கு அருகாமையில் தொடரும் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் விடுதியின் சுற்றுபுரம் முழுவதும் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுளாளதோடு சரிந்து விழும் அபாயத்தில் காணப்படுகிறது.
இது தொடர்பில் கெர்க்கஸ் வோல்ட் தோட்ட நிருவாகமும் நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment