ஜே.எப்.காமிலா பேகம்-
மசகு எண்ணை கப்பல் தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது
அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு எண்ணெய்க் கப்பலொன்று தீப்பற்றி எரிகின்ற நிலையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருக்கோவில், தம்பிலுவில், உமிரி, பொத்துவில் கல்முனை, ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேச கடற்பிராந்தியத்தில் வாழும் மக்களை கருத்திற் கொண்டு இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கப்பலின் எஞ்ஜின் அறையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து இதுவரையில் பிரதான எரிபொருள் தாங்கி வரையில் பரவவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment