20 ஆண்டுகள் நிறைவடைந்தும் தன் நினைவுகளால் மக்கள் மனதில் இன்னும் வாழும் மாபெரும் தலைவர் மர்ஹூம் MHM,அஸ்ரப் அவர்களின் நினைவு நாள் துஆப்பிரார்தனையும், SLMC இன் ஆரம்ப காலப் போராளிகளின் உரையும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர்சேகுதாவூத் அவர்களின் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் தருஸ்ஸலாம் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் UL.முகைதீன் பாவா ஜேபி, அல்ஹாபிஸ் அமீன் ,
முன்னால் மக்கள் வங்கி மாவட்ட முகமையாளர் A.சம்சுதீன்,
ஏறாவூர் நகரசபை உறுப்பினர் நிசார் ஜேபி,
ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் சையினுலாப்தீன் ஜேபி,றாபி, பெற்றோலியத்தில் பணிபுரியும் M.சஹீத் உட்பட
முன்னாள் நகரசபை எதிர்கட்சி தலைவரும் உதவும் உள்ளங்கள் அமைபின் தலைவருமான KL.அகீல் அர்ஷாத். ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வின் போது முஸ்லிம் சமூகத்தின் தலைவரும் SLMC ஸ்தாபகருமான MHM.அஸ்ரப் அவர்களின் மரணம் திட்டமிடப்பட்ட கொலையா? அல்லது விபத்தா? என்பதனை உடனடியாக விசாரனை செய்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு கௌரவ.ஜனாதிபதி கோடாபாய ராஜபக்க்ஷ அவர்களும் பிரதமர் மஹிந்தராஜாபக்க்ஷ அவர்களும் கூறவேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டமை கூறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment