கலைஞர்களுக்கு தனியார் நிறுவனம் ஒன்றினால் இலவச காப்புறுதி வழங்கும் திட்டத்தின்கீழ் காப்புறுதி வழங்கும் நிகழ்வு ஒன்று நேற்று பொதுஜன கலைச் சுவர் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு- 7 விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள டவர் மன்ற மண்டபத்தில் சிறிதுங்க பெரேரா தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது முதற்கட்டமாக 222 கலைஞர்களுக்கு அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்தவினால் இலவச விபத்துக் காப்புறதி வழங்கப்பட்டது.இதன்போது இலங்கை தமிழ் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் சுருதி பிரபாவின் முயற்சியினால் தமிழ் கலைஞர்கள் 30 பேருக்கும் இதன்போது காப்புறுதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஏதிர் காலத்தில் அனைத்துக் கலைஞர்களுக்கும் இந்த காப்புறுதியை பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் கலைஞர்களின் ஆற்றல்களைக் கூட்டி அவர்களின் திறமைகளை வெளிக் கெண்டு வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது (தனியார் ஒருவரால் இது வழங்கப்பட்டுள்ளது.)
0 comments :
Post a Comment