வட்டவளை பொலிஸ்; பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கரோலினா பகுதியில் பாரிய மரம் ஒன்று இன்று (10) அதிகாலை 5.50 மணியளவில் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக ஹட்டன் கொழும்பு ஹட்டன் கண்டி ஊடான பிரதான போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து வட்டவளை பொலிஸார்; மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றியதனை தொடர்ந்து பொது போக்குவரத்து வழமை நிலைக்கு திரும்பியுள்ளன.
குறித்த மரம் வீழ்ந்ததன் காரணமாக சுமார் 30 நிமிடத்திற்கும் மேல் மேல் பொது போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின .
இதனால் கொழும்பு ஹட்டன், கண்டி வைத்தியசாலைக்களுக்கு சென்ற நோயாளர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்;நோக்கினர்.
மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணத்தினால் மின் கம்பங்கள் மற்றும் தொலை பேசி கம்பங்களும் உடைந்து போய் உள்ளன.
இதனால் ஒரு சில பகுதிகளுக்கு தொலை பேசி இணைப்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
குறித்த விதியில் வீழ்ந்த மரத்தினையும் வெட்டி அகற்றி தொலை பேசி மற்றும் மின் இணைப்புக்களை சீர் செய்யும் நடவடிக்கைகளில் அந்நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் சீர் செய்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment