சாய்ந்தமருது சஹ்ரியன் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் அண்மையில் அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகத்தில் கௌரவ கலாநிதி பட்டம் பெற்ற சிலோன் மீடியா போரத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான றியாத் ஏ மஜீத் மற்றும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் உயர்பீட உறுப்பினரும் பிரபல சமூக சேவகருமான ஹக்கீம் செரீப் ஆகியோர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (27) இரவு சாய்ந்தமருது தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
சாய்ந்தமருது சஹ்ரியன் விளையாட்டுக்கழக தலைவர் எஸ்.எச். ஜிப்ரியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கௌரவ கலாநிதி பட்டம் பெற்ற இருவரையும் பொன்னாடை போற்றி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்கள், கௌரவ கலாநிதி பட்டம் பெற்ற இருவரும் தன்னுடைய நீண்ட கால நண்பர்கள் என்பதையும் தனக்கும் அவர்களுக்கிடையே இருந்த நட்பின் கடந்த கால நினைவுகளையும் இங்கு சிலாகித்து பேசியதுடன் இவர்கள் இந்த சமூகத்தின் பால் நாட்டம் கொண்டு செய்த சமூக சேவைகள் பற்றியும் விரிவாக உரையாற்றினார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியும், மெஸ்ரோ ஸ்ரீலங்காவின் தலைவருமான சட்டத்தரணி ஏ.எம். நஸீல், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.ஜாபீர், வாழைசேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சட்டத்தரணி ஹபீப் றிபான், சாய்ந்தமருது சஹரியன் விளையாட்டுக்கழக தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் இணைப்பு செயலாளருமான நௌபர் ஏ பாபா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கல்முனை, காரைதீவு உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், சாய்ந்தமருது சஹரியன் விளையாட்டுக்கழக முக்கியஸ்தர்கள், சிலோன் மீடியா போரத்தின் செயலாளர், பொருளாளர், பிரதித்தலைவர்கள், உயர்பீட உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது கிரிக்கட் சம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள், பிரதேச கழகங்ளின் கிரிக்கட் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment