தாவூத் போரா பிரிவைச் சேர்ந்த தலைவர் உட்பட 54 பேர் , அடுத்தவாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
போரா அமைப்பின் தலைவரான சயிட்னா முப்படால் சைப்பிரடீன் தலைமையிலான குழுவினர் கடந்த ஜுன் மாதத்தில் இலங்கைக்கான விஜயத்தை செய்யவிருந்தனர்.
இருந்த போதிலும் மும்பையில் இவர்கள் தங்கியிருந்து மாநாட்டை நடத்தியபோது அதில் பங்கேற்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு பல பாதிப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக இலங்கை்ககான விஜயம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இவர்களது விஜயம் குறித்து சிவில் விமான சேவை நிறுவனத்தின் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியிடம் வினவியபோது, அவர்களின் விஜயத்திற்கான திகதி இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் இந்த மாத இறுதியில் அவர்கள் விஜயம் செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, போரா அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் இலங்கைக்கு வரும்போது, விமான நிலையத்தில் செய்யப்படுகின்ற பி.சி.ஆர் உட்பட கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தும் சட்டங்கள் அவர்கள்மீது பாவிக்கப்படுவதில்லை என்று பல ஊடகங்களும் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment