அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை கெளரவிக்கும் நிகழ்வும், நாவிதன்வெளி பிரதேச பாலர் பாடசாலை ஆசிரியைகளை கெளரவிக்கும் நிகழ்வும் கடந்த சனிக்கிழமை நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி நவாஸ் தலைமையில் சாளம்பங்கேணி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு கொண்டார். மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ், மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பொருளாளருமான பைசால் காசிமும் கலந்துகொண்டனர். மேலும் களமுனை மாநகர பிரதிமுதல்வர் ரஹ்மத் மன்சூர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவான முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் நாவிதன்வெளி பிரதேச பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment