மீண்டும் பாரளுமன்றம் செல்லுமாறு ரணிலுக்கு யோசனை முன்வைப்பு!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
டந்து முடிந்த பொதுத் தேர்தலில் UNPக்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினர் பதவிக்கு UNPயின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

UNPயின் 74 வது ஆண்டு நிறைவு வைபவத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளதாவது:-
நாம் அணி ஒன்றை தெரிவு செய்யும் போது, சிறந்த வீரர்தானே
போட்டியில் விளையாடுவார். பெயர்களின் அடிப்படையில் போட்டிகளில் விளையாட மாட்டோம்.
பரம்பரையை சேர்ந்தவர் விளையாட மாட்டார். நாம் எப்போதும் சிறந்த அணியை உருவாக்கவே முயற்சிப்போம். இந்த சந்தர்ப்பத்தில் அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதால், ரணில் விக்ரமசிங்க பாரளுமன்றத்திற்கு செல்ல வேண்டுமென்று நாங்கள் கூறுகிறோம்.
அதேவேளை பாரளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாக ரணில் விக்ரமசிங்க பாரளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
UNPயில் மாத்திரமல்ல, பாரளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரில் அரசியலமைப்புச் சட்டம், திருத்தச் சட்டம் குறித்து நன்கு அறிந்த திறமையான நபர் ரணில் விக்ரமசிங்க எனக் கூறப்படுகிறது.

இப்படியான சந்தர்ப்பத்தில் அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தமாக நன்கு அறிந்த நபர் பாரளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இது சம்பந்தமாக ரணில் விக்ரமசிங்க தனது விருப்பத்தை இன்னும் தெரிவிக்கவில்லை

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :