லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் குழுமம் மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கிடையே சந்திப்பு.



பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும் உறுதி.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் வடிகால் துறை அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார மற்றும் லாக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்கா குழுமம் ஆகியோருக்கிடையேயான சந்திப்பு ஒன்று 2020.09.30 ஆம் திகதி அமைச்சுகாரியாலயத்தில் இடம்பெற்றது.

லாக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்காவின் தலைவர், சமூக சிந்தனையாளர் ஏ.எல்.அன்சார் உள்ளிட்ட குழுவினருக்கும் அமைச்சருக்கும் இடையேயான சந்திப்பின்போது மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது இதில் பிரதானமாக சுனாமியின் காரணமாக பாதிக்கப்பட்டு சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் குடியிருக்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அன்சார் குழுவினரால் அமைச்சருக்கு எடுத்துக் கூறப்பட்டது இதில் குறித்த பிரதேசத்தில் குடியிருக்கும் மக்களுக்கு அவர்களது காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படாமையால் அவர்கள் எதிர் நோக்கும் சிக்கல்கள் தொடர்பிலும் சரியான பாதைகள் இன்மை குறித்தும் இந்த பிரதேசத்தில் அடிக்கடி இடம்பெறும் நீர்வெட்டு தொடர்பிலும் அமைச்சருக்கு எடுத்துக் கூறினோம் என்றும் தலைவர் அன்சார் எங்களது ஊடகத்துக்கு வழங்கிய விஷேட செய்தியின் தெரிவித்தார்.

அநேகமான தேவைகளை உடன் தீர்த்துத் தருவாதாக் கூறிய அமைச்சர் இந்தப் பிரதேசத்துக்கான விஜயம் ஒன்றையும் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :