திருகோணமலை மாவட்டத்தில் பல்கலைக் கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா சூறா சபையினர் ஜனாதிபதி,கல்வி, உயர் கல்வி அமைச்சு ஆகியோரை கோரி மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளது.
இக் கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
.நாட்டில் தற்போதுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக பத்து பல்கலைக்கழகங்களை அமைக்க உள்ளதாக தெரியவருகின்றது.
இந்த அடிப்படையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளாகமாக செயல்படும் திருகோணமலை வளாகம் முழுமையான பல்கலைக்கழகமாக மாற்றப்பட வேண்டும் எனவும்.
மேலும் இதன் வளாகங்கள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அமைக்கப்பட வேண்டும் எனவும் சமுத்திரவளம் தொடர்பான வளாகம் கிண்ணியா பிரதேசத்தில் அமைக்கப்பட வேண்டும். எனவும் அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment