அஷ்ரப் ஏ சமத்-
வீடமைப்பு நிர்மாணத்துறை கட்டிடப் பொருட்கள் இராஜாங்க அமைச்சா் இந்திக்க அனுரத்த அவா்கள் உயிா்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிா் இழந்தவா்கள், காயப்பட்டவா்களுக்காக அரசாங்கம் நிர்மாணித்து வரும் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக மல்கம் காடினா் ரண்ஜித் ஆண்டகை அவா்களை அவா்களது பொரளை இல்லத்தில் வைத்து கலந்துரையாடினாா்.
பிரதம மந்திரியும் வீடமைப்பு நிர்மாணத்துறை நகர அபிவிருத்தி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச அவா்களின் வேண்டுகோளின்படி உயிா்த்த ஞாயிறு தாக்குதலில் உயிா் நீா்த்தவா்கள் காயப்பட்டவா்களுக்காக அரசாங்கம் நிர்மாணித்து வரும் வீடமைப்புத்திட்டங்களை உடனடியா பூரணப்படுத்துமாறும் அதனை விரிவுபடுத்துமாறும் இராஜாங்க அமைச்சருக்கு பிரதமா் ஆலோசனை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சா் தெரிவித்தாா்.
0 comments :
Post a Comment