அவுஸ்ரேலியாவிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து கவனம் செலுத்தவும் தூதுவரிடம் சாணக்கியன்!

வுஸ்ரேலியாவிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து கவனம் செலுத்துமாறு அவுஸ்ரேலியதூதுவரிடம் வலியுறுத்தினார் சாணக்கியன்!

இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹோலி (Mr. David Holly) இற்கும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் நேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பாகவும்,
இரா.சாணக்கியனின் Vision For Batticaloa 2030 திட்டத்துக்கமைய வெளிநாட்டு
தனியார் முதலீடுகள் குறித்தும் பேசப்பட்டுள்ளன.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும்
வளர்ச்சி குறித்தும், நாட்டின் சமகால அரசியல் விடயங்கள் குறித்தும்
பேசப்பட்டுள்ளன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :