வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருக்கு அச்சுறுத்தல்!

லிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளராகிய நான் எமது ஆட்சிப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் கடைகளைத் திறந்திருக்க வேண்டும் என்று அச்சுறுத்திவந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த சமயம் எனது பாவனையில் உள்ள பிக்கப் வாகனத்திற்கு முன்பாக வந்து குறுக்கே நின்ற பஜிரோ வாகனம் ஒன்றில் இருந்து இறங்கிய இராணுவத்தினர் அச்சுறுத்தும் வகையில் வாகன இலக்கத்தகடு, வாகனத்தில் உள்ள பெயர்ப்பலகை உள்ளிட்டவற்றை படம் பிடித்து அச்சுறுத்தினர்.

இன்று காலை அச்சுவேலி மத்திய கல்லூரிக்கு முன்பாக 11.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றது. அதி செகுசு பிரமுகர் மின்குமிழ் பொருத்தப்பட்ட இராணுவ வாகனங்கள் பல இன்று அச்சுவேலி நகருக்குள் நுழைந்து திறக்கப்படாத கடைகளின் உரிமையாளர்களின் விபரங்களை அவதானித்து வந்தனர். 

இராணுவ சிப்பாய்களும் இராணுவ புலனாய்வாளர்களும் நேற்று மாலை முதல் வர்த்தக நிலை உரிமையாளர்களிடம் சென்று கடைகளைத்திறக்க வேண்டும் என அச்சுறுத்தி வருகின்றனர்.

இந் நிலையில் நான் சென்று திறந்திருந்த கடை உரிமையாளர்களுக்கு பேசியபோது அச்சத்தின் நிமர்த்தமே தாம் கடைகளைத் திறந்துள்ளதாகவும் பல வர்த்தகர்கள் உடன் கடைகளை பூட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே இராணுவத்தினர் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :