உலகதரிசன நிறுவனத்தின் கல்விப்பணி காலத்தால் அழியாது! ஆரம்பவகுப்பறை திறப்புவிழாவில் நாவிதன்வெளி அதிபர் பாலசிங்கன் புகழாரம்.



காரைதீவு சகா-
லக தரிசன நிறுவனத்தின் கல்விப்பணி காலத்தால் அழியாதது. அதன் அறுவடைகள் இன்னும் ஓரிருவருடங்களில் வெளிப்படும். அப்போது கல்விச்சேவைக்காக அர்ப்பணித்த அதிகாரி தனு தொடக்கம் அனைவரும் நிச்சயம் நினைவுகூரப்படுவார்கள் என்பதில் எவ்வித ஜயமுமில்லை.
இவ்வாறு உலகதரிசன நிறுவனத்தால் நவீனமயப்படுத்தப்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலய ஆரம்பநெறி வகுப்பறைக்கட்டத்திறப்புவிழாவில் உரையாற்றிய வித்தியாலய அதிபர் சீ.பாலசிங்கன் புகழாரம் சூட்டினார்.

இத்திறப்பு விழா நேற்று நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் நடைபெற்றபோது உலகதரிசனநிறுவனத்தின் நாவிதன்வெளிப்பிராந்திய அபிவிருத்திக்கான பணிப்பாளர் ஏ.தனுராஜ் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் நாடாவெட்டித்திறந்துவைத்தனர்.
கடந்த 13வருடகாலமாக நாவிதன்வெளிப்பிராந்தியத்தில் உலகதரிசனநிறுவனம் பல்வேறுபட்ட கனதியான சேவைகளை ஆற்றி தற்போது விடைபெற்றுள்ளமையை முன்னிட்டு சேவைக்கான பாராட்டு மடல்கள் இவ்விழாவில் வாசித்து உரிய அதிகாரிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

விழாவில் அதிபர் பாலசிங்கன் மேலும் உரையாற்றுகையில்:

கல்விக்கும் சமாதானத்திற்கும் சேவையாற்றுவோர் மரணிப்பதில்லை. அவர்கள் இவ் உலகம் உள்ளவரை நினைக்கப்பட்டுக்கொண்டேயிருப்பார்கள். அதாவது அவர்கள் வாழ்ந்துகொண்டேயிருப்பார்கள்.
அந்தவகையில் இப்பின்தங்கிய நாவிதன்வெளிப்பிரதேசத்தில் உலகதரிசன நிறுவனம் கடந்த 13வருடகாலமாக பார்த்துப்பார்த்து ஆற்றிய சேவைகள் குறிப்பாக கல்விச்சேவைகள் என்பது யாராலும் இதுவரை செய்யப்படாதவை. கல்விக்காக இந்நிறுவனம் இட்ட மூலதனம் காத்திரமானவை. நிச்சயம் ஓரிருவருடங்களில் அது நல்லபலன்களைத்தரும்.அப்போது நீங்களனைவரும் நன்றியோடு நினைவுகூரப்படுவீர்கள்.
எனவே அதற்காக தங்களை பரிபூரணமாக அர்ப்பணித்த அதிகாரி தனுராஜ் உள்ளிட்ட அத்தனை உத்தியோகத்தர்களையும் நன்றியுடன் பார்க்கிறோம். வாழ்த்துகிறோம்.
எமது பாடசாலையில் ஆரம்பவகுப்பறைகளை பலலட்சருபா செலவில் நவீனமயப்படுத்தி சிறுவர்களை கவரும்வண்ணம் அதனை மாற்றியமைத்ததற்காக இந்நிறுவனத்தாருக்கு பாடசாலை சார்பில் நன்றிபகர்கிறோம். என்றார்.
விழாவில் உலகதரிசனநிறுவன நாவிதன்வெளிப்பிராந்திய இணைப்பாளர் ஏ.தனுராஜ் கணக்காளர் எஸ்.சுரேஸ் ஏனைய உத்தியோகத்ர்களான எ.சஞ்சீவ். எஸ்.அன்ரன் கே.இராஜதுரை மற்றும் பிரதிஅதிபர் திருமதி நிலந்தினிரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
சிரேஸ்டபட்டதாரிஆசிரியர் நடராஜா கோடீஸ்வரன் நெறிப்படுத்திதொகுத்தளித்த இவ்விழாவில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :