குவைத் நாட்டின் மன்னர் (அமிர்) ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபாவின் மறைவுக்கு நசீர் அஹமட் எம்பி அனுதாபம்

கு
வைத் நாட்டின் மன்னர் (அமிர்) ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபாவின் மறைவுக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தனது 91ஆம் வயதில் 29.09.2020 இன்று வபாத்தாகியுள்ள அமிர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபா 2006ஆம் ஆண்டு முதல் எண்ணெய் செல்வ வளம் கொழிக்கும் குவைத்தில் அவர் ஆட்சி செலுத்தி வந்தவராகும்.

மேலும், அந்நாட்டின் வெளியுறவு கொள்கை அமுலாக்கத்தை கடந்த 50 ஆண்டுகளாக அவர் மேற்பார்வையிட்டும் வந்ததோடு அரசு ராஜீய உறவுகளின் தலைவர் என்று அரபு நாடுகளால் அவர் அழைக்கப்பட்டும் வந்தார்.

‪1990-91‬ ஆண்டுகளில் வளைகுடா போர் மூண்டு, குவைத்தை ஈராக் படையினர் ஆக்கிரமித்தபோது, ஈராக்கை ஆதரிக்கும் நாடுகளுடனான உறவை மீளக் கட்டியெழுப்புவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.

வளைகுடா பிராந்தியத்தில் சவூதி அரேபியா, அதன் கூட்டணி நாடுகள், கத்தார் இடையே பதற்றம் அல்லது ராஜீய ரீதியிலான கசப்புணர்வு ஏற்பட்டபோதெல்லாம், அவற்றை மத்தியஸ்தம் செய்து வைக்க அல் சபாவின் தலையீடு அந்த நாடுகளுக்கு அவசியமாக இருந்தது.

அத்தகைய ஒரு சிறந்த அரசியல் தலைவரை இழந்து நிற்கும் குவைத் நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் அமைதியும் அருளும் கிடைக்க வேண்டும் என்று நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றேன்” என்று அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :