தமிழரசுக்கட்சி யாப்பில் முஸ்லீம் மக்களின் தனியான சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது-எம்.ஏ சுமந்திரன் எம்.பி



பாறுக் ஷிஹான்-
பாராளுமன்றத்திற்கு சிறுவயதில் சென்றிருந்த நான் ஒரு அரசியல்வாதியாக வருவதற்கு சிறுதும் எண்ணிஇருக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜயாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
மனித நேய நற்பணிப்பேரவை சம்மாந்துறை - ஸ்ரீலங்கா மற்றும் இர்ஷாத் ஏ.காதர் நற்பணி மன்றம் இணைந்த ஏற்பாட்டில் முஸ்லீம்களின் தேசிய தலைமையாக திகழ்ந்த கலாநிதி மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் சட்டமுதுமாணி அவர்களின் 20ஆவது ஆண்டு நினைவுப் பெருவெளி இன்று (27) முற்பகல் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் ஆரம்பமான வேளை நினைவு பேருரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

நான் பிரதிநிதித்துவ படுத்துகின்ற இலங்கை தமிழரசுக்கட்சி அதன் யாப்பில் முஸ்லீம் மக்களின் தனியான சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. வேற எந்த அரசியல் கட்சிகளின் யாப்புகளிலும் இவ்விடயம் இருக்கின்றதா என எனக்கு தெரியாது.முஸ்லீம் கட்சிகளுடைய அரசியல் யாப்பிலே இவ்விடயம் உள்ளதா? என எனக்கு தெரியாது.
ஆனால் தமிழரசுக்கட்சியின் யாப்பில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு தனித்தனியான சுயநிர்ணய உரிமை இருப்பதனை ஏற்றிருக்கின்றோம்.இதனால் தான் தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்த அஸ்ரப் வட்டுக்கோட்டை மாநாட்டிற்கும் சென்றிருக்கின்றார்.அங்கு தனித்தழிழீழம் பிரகடணம் செய்கின்ற போது அங்கு பிரசன்னமாக இருந்தவர்.இதனால் தான் அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தை பெற்றுத்தராவிடின் தம்பி அஸ்ரப் தமிழீழத்தை பெற்று தருவேன் என மேடைகளில் முழங்கியவர் என நினைக்கின்றேன்.பின்னர் 1977 ஆண்டு காலப்பகுதியில் தேர்தல் ஒன்றின் பின்னர் ஏற்பட்ட முடிவுகள் அஸ்ரப்பின் மனதினை மாற்றியது. அதன் தொடர்ந்து தான் முஸ்லீம் மக்களிற்கு தனிநாடு தேவையற்றது என எண்ணிய பின்னர் அவரது அரசியல் செயற்பாடு மாற்றமடைந்தது.
ஒரு கவிஞனாக சட்டவாளனாக அரசியல் வாதியாக தினந்தோறும் அவர் பரிணமித்தவர்.ஆரம்ப காலத்தில் இருந்த கொள்கையில் இருந்து நீங்கிய பலரிடம் பயமிருக்கும்.அனால் பெரும் தலைவர் அஸ்ரப்பிடம் அந்த பயம் இருக்கவில்லை என்பதை அவர் எழுதிய சில கவிதைகள் தெரிவித்திருக்கின்றது.தமிழ் பேசும் மக்களாக தனிநாடு கேட்டார்.அதனை மக்கள் ஆதரிக்கவில்லை என்பதற்காக
அவரது அரசியல் பாதை திரும்பியது.முஸ்லீம் மக்களுக்கு இந்நாட்டில் தனித்துவமாக வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.தேசிய மட்டத்தில் அந்த சிந்தனை இருந்தது என குறிப்பிட்டிருக்கின்றார் என கூறினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :