பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப் பெற்று அரச தொழிலில் காலடி வைத்து இருக்கும் பட்டதாரிப் பயிலுனர்களாகிய நீங்கள் சிறந்த ஆளுமைகொண்டவர்களாகவும், வினைத்திறன் மிக்கவர்களாகவும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் உந்துசக்தியாக திகழ்கின்றவர்களாக மாற வேண்டும் என கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை ஹபிபுல்லா தெரித்தார்.
அண்மையில் பட்டதாரிப் பயிலுனர்களுக்கான பயிற்சி நிகழ்வொன்றில் வளவாளராக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் எமது நாட்டின் அரசாங்கம் பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையிலும் கூட சுமார் 60000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியிருப்பது என்பது சாதாரணமான விடயம் அல்ல. எனவே பயிலுனர்களாக கடமையேற்ற ஒவ்வொரு பட்டதாரிகளும் நாட்டின் நிர்வாக கட்டமைப்புக்கு உந்துசக்தியாக இருப்பதுடன் வினைத்திறன்மிக்கவர்களாவும், சிறந்த ஆளுமை கொண்டவர்களாகவும் தங்களை வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதோடு எதிர்காலத்தில் அரச போட்டிப் பரீட்சைகளில் தங்களை முழுமையாக தயார்படுத்தி அதில் வெற்றிவாகை சூட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்
மேலும் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று மக்களுக்காக சேவையாற்ற இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களாகிய நீங்கள் மக்களுக்கான அரச சேவையினை திருப்திகரமான முறையில் செவ்வனே நிறைவேற்ற வேண்டும் என்பதோடு அரச பணிக்கு வந்து இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களையுன் தெரிவித்துக் கெள்ளுகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
மேற்படி நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல் பதுருத்தீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment