இது குறித்து பேசிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், “கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாததாக உள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சமூக விலகல் விதிகளுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. புதிய மூன்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.
இதேவேளை லண்டன் மேயர் சித்திக் கான் கூறும்போது, “அரசாங்க அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை முடிவில், லண்டனில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது என்பது தெளிவாகியுள்ளது. அதன் வேகம் கூடியுள்ளது. இரண்டாம் கட்ட அலையை நெருங்கிவிட்டோம். கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பிற பகுதிகளில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள சில நடவடிக்கைகளை நாங்கள் பரிசீலிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment