ஜே.எப்.காமிலா பேகம்-
சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கையின் போது குருதிப்பரிசோதனை கருத்திற் கொள்ளப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை குருதிப் பரிசோதனையில் நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளமை கண்டறிப்பட்டால் சாரதி அனுமதி பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கையில் அது கருத்திற்கொள்ளப்பட மாட்டாது எனவும் ராஜாங்க அமைச்சர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்
இதனிடையே முச்சக்ககர வண்டிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரம் வெளியிடப்படவுள்ளதாகவும் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment