மூதூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க பெரியபால எரிபொருள் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த எரிபொருட்கள் கடந்த 29. 08 .2020 முதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தினமும் எரி பொருட்களுக்காக வரும் கை இயந்திரங்கள், வாகனங்கள், என்பன பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
காலை மற்றும் மாலை வேளைகளில் நீண்ட வரிசையில் வாகனங்களும் வாடிக்கையாளர்களும் நிற்பதை காணக்கூடியதாகவுள்ளது.
மூதூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலம் இரு இடங்களில் எறிபொருட்கள் விற்பனை இடம்பெற்று வரும் நிலையில் குறித்த பெரியபால எரிபொருள் விற்பனை நிலையத்திற்கான எரிபொருள் வழங்கலே நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது விடயமாக மூதூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க தலைவர் பி.எம் நக்கிப்பிடம் வினவியபோது எரிபொருள் வழங்கும்ஐ.ஓ சி நிறுவனத்திலிருந்து ஆகஸ்ட் 29ம் திகதி வந்த ஒரு தொலைபேசி அழைப்பின் படி எரிபொருள் வழங்கலே நிறுத்துவதாக அறிவித்திருந்தனர்.
இதுதவிர எழுத்து மூலமாக எதுவித அறிவித்தல்களும் கிடைக்கவில்லை மேலும் திடீரென எரிபொருள் வழங்கலே மூடுவதற்கான விடயம் தொடர்பாக கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச் சபை இயக்குனர் சபை ஊடாக ஆலோசனைக்கமைய கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் உதவி கூட்டுறவு ஆணையாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment