அவர் மேலும் தெரிவித்ததாவது அண்மையில் தேசிய உடை அணிந்து அதற்கு மேலால் சத்ரி எனும் ஆடை அணிந்து சென்ற அதாவுள்ளாவை பார்த்து ஐ எஸ் ஐ எஸ் என கொழும்பு மாவட்ட பா. உறுப்பினர் மரிக்கார் சத்தமிட்டது அவரின் ஐ எஸ் ஆடை எது என்ற அறியாமையை காட்டுகிறது.
ஐ எஸ் என்பது முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பெரும்பாலும் அரபிகளாகவே இருந்தனர். அதாவுள்ளா அணிந்த ஆடை என்பது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பொது மக்களின் ஆடையாகும். அந்த ஆடை ஐ எஸ்ஸுக்கென்ற தனியான ஆடை என அறிமுகம் பெற்றதல்ல.
அதாவுள்ளாவின் ஆடை பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு மாற்றமாக இருப்பின் அது பற்றிய ஒழுங்கு பிரச்சினையை எழுப்பியிருக்க முடியும். அதனை விடுத்து ஐ எஸ் ஐ எஸ் என கூச்சலிட்டமை மிக பெரிய தவறாகும். இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
0 comments :
Post a Comment