ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளரான அக்கிலவிராஜ் காரியவசம், கட்சியின் தலைமைப் பீடத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதாவது, தாம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும், ஆகவே புதிய ஒருவரை பொதுச் செயலாளராக நியமிக்குமாறும் அவர் கோரிக்கை முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் சிறிகொத்தவில் நடந்த நிகழ்வொன்றின்போதும் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சிக்குள் மறுசீரமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
இந்த மறுசீரமைப்பிற்குள் பொதுச் செயலாளர் பதவியிலும் மாற்றம் செய்யும்படி அக்கிலவிராஜ் காரியவசம் கோரியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment