கம்பளையில் கேரளா கஞ்சா மீட்பு



க.கிஷாந்தன்-
ண்டி, கம்பளை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பிரதேசத்தில் 06.09.2020 அன்று மாலை போதைப் பொருள் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்து இருந்த 40 இற்க்கு மேற்பட்ட கேரளா கஞ்சா பெக்கட்டும் மற்றும் பெக்கட் செய்ய வைத்து இருந்த கேரளா கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றினர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக இரகசியமாக கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரளா கஞ்சா பெக்கட் ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :