ஏறாவூர் நாஸர்-ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழக்திற்கும் காத்தான்குடி பதுறியா அணிகளுக்குமிடையிலான சினேகபூர்வ உதைப்பந்தாட்டப்போட்டி ஏறாவூர் அஹமட் பரீட் பொது மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது 2 க்கு 1 என்ற கோள் வித்தியாசத்தில் ஏறாவூர் லக்கி ஸ்டார் அணி வெற்றிபெற்றது.
காத்தான்குடி அணியின் எம். றிபாய் ஒருகோளை அடித்தார். ஏறாவூர் அணியின் எம்எஸ். இஸ்ஸதீன் மற்றும் எம்எச்எம். முஹர்ரம் ஆகியோர் கோள்களை அடித்தனர்.
லக்கி ஸ்டார் தலைவர் எம்எச்எம். மஹ்றூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் முதல்வர் எம்ஐஎம். தஸ்லிம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மூன்று பாதணிகளை அடையாளச்சின்னமாக வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment