ஜப்பானில் 1867 ஆண்டில் நடந்த போஷின் போர் முதல் 2ம் உலக போர் வரை, போர்களில் இறந்த சுமார் 25 லட்சம் ஜப்பானியர்களின் நினைவாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் யாசுகுனி என்கிற கோவில் உள்ளது. இந்த கோவில் கட்டப்பட்ட காலத்திலிருந்தே சீனாவும், தென்கொரியாவும் அதற்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
யுத்தம் இடம்பெற்ற காலத்தின் போது தங்கள் நாட்டவர்களை கொலை செய்தவர்களை தியாகிகளாக ஜப்பான் அரசாங்கம் கருதுவதாகவும், தங்கள் மீதான அடக்குமுறையின் நினைவுச்சின்னமாக யாசுகுனி கோவிலை கருதுவதாகவும் சீனாவும், தென்கொரியாவும் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் இந்த கோவிலுக்கு ஜப்பானின் அரசியல் தலைவர்கள் செல்வதை சீனாவும், தென் கொரியாவும் வன்மையாக கண்டித்தும் வருகின்றன. இந்நிலையில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சே அபே சுமார் 7 வருடங்களுக்கு பிறகு சர்ச்சைக்குரிய யாசுகுனி கோவிலுக்கு நேற்று சென்றார். ஜப்பான் பிரதமர் பதவியிலிருந்து விலகிய சில நாட்களுக்கு பிறகு அவர் அந்த கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். சர்ச்சைக்குரிய கோவிலுக்கு தான் சென்ற தகவலை ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சே அபே அவரே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சே அபே பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும் இன்னமும் அவர் ஜப்பானின் முக்கிய அரசியல் பிரமுகராக கருதப்படுகிறார். எனவே அவர் சர்ச்சைக்குரிய யாசுகுனி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதை சீனா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment