மணல் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்-


ட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு விவசாயிகளினால் மாதுறுஓயா கிளை ஆற்றில் இடம்பெறும் மணல் அகழ்வினை தடுக்க கோரி இன்று செவ்வாய்கிழமை கவனஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

புணாணை கிடச்சிமடு விவசாய அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனஈர்ப்பு போராட்டம் கிடச்சிமடு விவசாய கண்டத்தில் இருந்து ஆரம்பமாகி ரிதிதென்னை சந்திவரை சென்றடைந்தது.

இதன்போது மண் அகழ்வின் மூலம் விவசாயத்தினை அழிக்காதே, மண் அகழ்வின் மூலம் புணாணை மேற்கில் பதினைந்தாயிரத்துக்கு மேற்பட்ட நெற்காணிகள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பது யார், வனபரிபாலன புவிச்சரிதவியல் திணைக்களமே புணாணை மேற்கில் மண் அகழ்விற்கு அனுமதி வழங்காதே, தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை அழிக்காதீர், மண் அகழ்வால் இன்றோடு வன வளம் இல்லை என பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கிரான் பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட புணாணை மேற்கில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதால் பதினைந்தாயிரத்துக்கு மேற்பட்ட நெற்காணிகள் மற்றும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் இடம்பெறவில்லை. அத்தோடு மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் நண்பர்கள் போன்று பழகுவதால் இவர்களின் உதவியுடன் மணல் அகழ்வு இடம்பெறுகின்றது.

இதன் காரணமாக வாய்க்கால் ஆழமான நிலைமைக்கு தள்ளப்பட்டு காணப்படுவதால் விவசாய நிலம் பள்ளமாக காணப்படுகின்றது. இதனால் விவசாய செய்கைக்கு நீர் பாய்ச்சுவது பாரிய பிரச்சனையாக காணப்படுவதுடன், மணல் அகழ்வில் ஈடுபடுவதால் விவசாயிகள் பயன்படுத்தும் பாதைகள் சிதைவடைந்து காணப்படுகின்றது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மண் அகழ்வு விடயத்தில் உரிய அதிகாரிகள் கரிசனை காட்ட வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

குறித்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச செயலக உத்தியோகத்தர், கிராம சேவை அதிகாரி ஆகியோருக்கு மகஜர் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் கருத்து தெரிவிக்கையில் - தங்கள் பிரதேச எல்லைக்குட்பட்ட வீதிகளை மணல் அகிழ்வில் ஈடுபடுவோர் சேதப்படுத்தியுள்ளனர், அத்தோடு பிரதேச சபைக்கு ஒரு கியூப் மணலுக்கு பணம் செலுத்த வேண்டும் ஆனால் செலுத்துவதில்லை. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தமைக்கமைய போராட்டம் கழைந்து செல்லப்பட்டது.

குறித்த ஆர்பப்hட்டத்தில் புணாணை மேற்கு கண்ட விவசாயிகள் மற்றும் புணாணை பன்சமஹ விகாரை விகாராதிபதி எல்லேவேவெ பீதாலங்கார ஸ்தவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :