வவுனியாவில் செயற்கை முட்டைகளை பயன்படுத்தி சிற்றுண்டி தயாரித்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக்கைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட செயற்கை முட்டைகள் சிற்றுண்டி தயாரிப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த உணவகத்தில் ரோல்ஸ் உட்கொண்ட ஒருவர் முட்டையின் சுவை தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக உணவக உரிமையாளருக்கு இது குறித்து அறிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து உணவக உரிமையாளர் கவனம் எடுக்காத காரணத்தினால், குறித்த நுகர்வாளர் வவுனியா நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
உடன் செயற்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உணவகத்தினை பரிசோதனையிட்ட போது சிற்றுண்டி வகைகளுக்கு பிளாஸ்டிகினால் உற்பத்தி செய்யப்பட்ட செயற்கை முட்டைகள் பயன்படுத்தப்பட்டமை அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.(Ceylon nation)
0 comments :
Post a Comment