மட்டக்களாப்பு - செங்கலடி பிரதான வீதியில் இன்று மாலை (18) இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பகுதியில் இருந்து முறக்கொட்டாஞ்சேனை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் செங்கலடி பிரதான வீதியால் நடந்து சென்ற நபரையும் சைக்கிளில் சென்ற நபர் ஒருவரையும் மோதித் தள்ளியுள்ளதுடன், உணவகம் ஒன்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இதில், துவிச்சக்கர வண்டியில் சென்ற நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். அத்துடன், குறித்த விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment