டிக்டாக், வீசாட் செயலிகளை தடை விதிக்க அமெரிக்கா திட்டம்!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-


பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டாக் உள்பட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன.

இது தொடர்பாக அண்மையில் பேசிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

டிக்டாக் செயலி மூலம் சீனா உளவு பார்க்க முயற்சிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகிறது. எனினும், தங்கள் நிறுவன செயல்பாடுகளில் சீன அரசாங்கத்தின் பங்கு எதுவும் இல்லை என்று டிக்டாக் நிறுவனம் தொடர்ந்து கூறிவருகிறது.

இந்நிலையில், சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமுடைய வீடியோக்களை பகிரும் செயலியான டிக்டாக் மற்றும் செய்திகளுக்கான செயலியான வீசாட் ஆகியவற்றை மக்கள் பதிவிறக்கம் செய்வதற்கு வரும் 20ம் திகதியிலிருந்து தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இந்த உத்தரவை இன்றே பிறப்பிக்கவும் அமெரிக்க வர்த்தக துறை திட்டமிட்டு உள்ளது என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :