தீ விபத்து ஏற்பட்ட MT NEW DIAMOND கப்பலின் பிரதான கப்டன் கல்முனைக்கு அழைத்து வரப்பட்டார்.
கடற்படையினரின் விசேட பாதுகாப்புடன் இன்று(10) இரவு 7.30 மணியளவில் கல்முனை குருந்தையடி கடற்பிரதேசத்தில் டோராப்படகு ஒன்றில் அழைத்து வரப்பட்டு காலி துறைமுகம் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பனாமா அரசுக்கு சொந்தமான MT NEW DIAMOND என்ற கப்பல் கடந்த செப்டம்பர் 3 ஆம் திகதி தீ விபத்துக்குள்ளாகியது.
இதன் போது தீப்பற்றி எரிந்துக் கொண்டிருந்த கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் மாலுமி ஒருவர் உட்பட 18 ஊழியர்கள் வேறு ஒரு கப்பல் மூலம் கடற்படை மீட்டிருந்தது.
அத்துடன் குறித்த கப்பலின் பிரதான கப்டன் மீட்கப்பட்டு வேறு கப்பல் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட நிலையில் 6 நாட்களின் பின்னர் கரைக்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment