அம்பாறை கல்முனை வாடி வீட்டு கடற்கரையில் அன்றாடம் இடம்பெறும் சமூகச் சீர்கேடுகள் தொடர்ந்து வருகின்றது.
கடற் கரையில் நீண்டநாட்களாக சமூக சீர்கேடு இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படும் கடற்கரையை அண்டிய பகுதியில் கல்முனை இராணுவ முகாம் மற்றும் கடற்படையினரின் முகாம் என்பன காணப்படுகின்றன.
தற்போது அங்கு உள்ள இராணுவ முகாம்களில் பாதுகாப்பு அரண் போடப்பட்டுள்ள போதிலும் இவ்வாறு சமூக சீர்கேடுகள் தொடர்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இவ்வாறான போக்கினால் இளவயதினர் மதுவிற்கு அடிமைகளாகக் வருவதுடன் பாரதூரமான சீர்கேடுகளை உருவாக்கியிருக்கிறது.
மேலும் இவ்வாறான நடவடிக்கையினால் சமூகத்தில் இன்று ஏற்பட்டுள்ள சிறுவர் துஷ்பிரயோகங்கள் பாலியல் சேட்டைகள் மற்றும் முறையற்ற கர்ப்பம் தரித்தல் போன்ற செயற்பாடுகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே சமூக சீர்கேடு சம்பவங்களோடு தொடர்புடையவர்களை அணுகி இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து அவர்களை விடுவித்து சமூகத்துக்கு நல்லவர்களாக மாற்ற வேண்டும் சகல தரப்பினரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment