"சமகால வணிக சவால்கள் மற்றும் கொரோனோ வைரஸ் தாக்கத்தின் பின்னரான வியாபாரத்தை மாற்றியமைத்தலும், முன்கொண்டு செல்லுதலும்" என்ற மகுடம் தாங்கி வியாபாரிகள், தொழில் தருநர்களுக்கான கலந்துரையாடல் செயலமர்வு ஒன்று, (20) ஞாயிற்றுக் கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. (YMMA) பேரவையுடன் இணைந்து, கண்டி வர்த்தகச் சங்கம் (KMTA) இந்நிகழ்வை, கண்டி - ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
கண்டி நகர் மற்றும் நகரைச்சூழ வாழும் சுமார் 100 தொழில் வழங்குநர்கள், வர்த்தகர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலை, Blue Businesse Consultant (Pvt) Lt நிறுவனத்தின் முகாமையாளரும், விரிவுரையாளருமான கலாநிதி ரஷாத் ஹுஸைன் (Rashad Hussain), "காலத்திற்குக் காலம் ஏற்படும் அனர்த்தங்களை விட வியாபாரச் சூழல், அதன் தன்மை, மத்திய வங்கியின் பொருளாதார அறிக்கை தொடர்பிலான அறிவின்மை, புதிய முறைகளை நோக்கி சிந்திக்காமை, முறையான பகுப்பாய்வுத் திட்டமிடல் இன்மையே எம்மிடம் உள்ள பாரிய அனர்த்தமாகும்" என்ற மையக்கருத்தின் கீழ் நடாத்தினார்.
எதிர் காலங்களில் இது போன்ற இன்னும் பல தலைப்புக்களில் வர்த்தகச் சமூகத்தை விழிப்புணர்வூட்ட, கண்டி வர்த்தகச் சங்கத்திடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. இதன்போது, அதற்கான காத்திரமான திட்டம் முன்னெடுக்கப்படும் என, முன்னாள் வை.எம்.எம்.ஏ. தலைவரும் தற்போதைய கண்டி வர்த்தகச் சங்கத் தலைவருமான சலீம்தீன் குறிப்பிட்டார்.
அத்துடன், கண்டி வர்த்தகச் சங்கத்துடன் இணைந்து செயலாற்ற வருமாறும் அவர் இதன்போது தொழில் வழங்குநர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு வலுச் சேர்க்கும் விதமாக, இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மிக்கு,
நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் செயற்திட்ட தவிசாளர்
யூ.எம். பாசில், ஒருங்கிணைப்பு மற்றும் மாவட்டப் பணிப்பாளர் பௌஸ் ஏ. காதர்,
கண்டி வர்த்தகச் சங்க உப தலைவர் எஸ்.எச். எம். ஆசிக் ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தனர். பொருளாளர்
ஏ.எல்.எம். ராசிக்,
உதவிச் செயலாளர் பவாஸ் ஆகியோர் இதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கினர். பேரவையின் உதவித் தேசியத் தலைவராக, கண்டி வை.எம்.எம்.ஏ. யிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மஹய்யாவைச் சேர்ந்த இளம் தலைவர், இதன்போது தேசியத் தலைவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பங்குபற்றிய அனைவரும் தங்களது நன்றிகளைத் தெரிவித்ததுடன், தொடர்ச்சியாக இவ்வாறான தெளிவூட்டும் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டுமென்பதையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை வேண்டிக் கொண்டனர்.
0 comments :
Post a Comment