10 நிமிடத்தில் கொரோனாவைக் கண்டறியும் சென்சார் பரிசோதனைக் கருவி!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

லகளவில் கொரோனா பரிசோதனைகள் சாதாரண மக்களால் மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். உலகளவில் அரசாங்கத்தின் சார்பில் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. சோதனை செய்து கொண்டாலும் ஒரு நாளைக்கு பிறகே முடிவுகளும் கிடைக்கின்றன. தற்போது 10 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் குறைந்த விலை சென்சார் பரிசோதனைக் கருவியை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.


கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஓப் டெக்னோலொஜியைச் ( California Institute of Technology ) (Caltech) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த சென்சார் கருவியை வடிவமைத்துள்ளனர். இந்த பரிசோதனைக் கருவி கிராபேன் ( graphene ) உதவியுடன் தயாரிக்கப்பட்டு மற்றொரு சென்சாருடன் இணைக்கப்பட்டது. அது ரத்தம், உமிழ்நீர், வியர்வையின் மூலம் நோய் பாதிப்பைக் கண்டறியும்.

ஒரு பிளாஸ்டிக் அட்டையில் அமைக்கப்பட்ட இந்த சென்சாரில் 3D கிராபோன் அமைப்பு உள்ளது. பெரும்பாலான உலக நாடுகளில் கொரோனா குறைந்துவரும் நிலையில், பல நாடுகளில் கொரோனாவின் பாதிப்பும் அதிகரித்தும் வருகிறது. எனவே பரிசோதனைகளை எளிமையாக செய்ய வேண்டிய கட்டாய நிலையேற்பட்டுள்ளது.

இந்நிலையில், விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள சென்சார் கருவி கொரோனா பரிசோதனைகளுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :